Uses of Snowba
Cooler is cooler.
The problem of solving the problem.
The body will get stronger if it is eaten daily with the nuggets and mugs.
Slice the pumpkin and cut it into small pieces and slice the scorpion if you eat it.
If you eat coconut oil with coconut, the body's organs become stronger.
Palmyra tuber ..!!
Now the tamarind tuberculosis. Everywhere in the house of everyone There is no one who does not love the palm oil. Everyone wants to eat.
This diet is very good for those with constipation. You can also eat palm and pepper. Onion, green chilli can be eaten and eaten. In addition, people who do not have a diet will eat it like this.
People who store the seeds during the fruits of the fruits of the time, put the soil in a timely manner as a platform and spread the seeds over it. When the seed germination is grown, it will be used by giant.
Fruit fruit
Okay. How is the Bhakti tuber formed now? The fall of the fall is the seed of the fruit and then the panam comes to the root. When the seeds are germinated, the material is stored in the ground and the tuber is formed. This is the snowball.
The diameter of a tip is about one foot and the diameter is about one inch in length.
Panang potatoes are not eaten raw. Immediately those who eat it will drink it in water. When tearing out the tuber and tearing it out in the waist, it will lose water in some days and become harder. This is called odial.
It does not eat. It is used to make the ingredient, such as bite and puree. The so-called wormwood is called wormwood.
You can eat the larvae directly. Both odor and leukemia are both long and unharmed.
You can eat the morning meal of the pulmonary flour that is dry and dry. It will be very good if you eat it with coconut and coconut. If the pest is in the stomach then die.
Odd will be taken from the odor of the snake Odial millet is made from oatmeal and oily pulp. These are the most popular foods
பனங்கிழங்கு குளிர்ச்சித் தன்மை உடையது.
மலச் சிக்கலைத் தீர்க்கக் கூடியது.
கிழங்கை மாவாக்கி அதோடு கருப்பட்டியும் சேர்த்து உருண்டை பிடித்து தினமும் சாப்பிட்டால் உடலுக்கு வலு கிடைக்கும். கிழங்கை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, மாவாக்கி சாப்பிட்டு வந்தால் மெலிந்த தேகம் பருமனாகும்.
< பனங்கிழங்குடன் தேங்காய்ப்பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் வலுவடையும்.
பனங்கிழங்கு ..!!
இப்போது பனம் கிழங்கு காலம் . எல்லோர் வீட்டிலும் எல்லா இடங்களிலும் பனம் கிழங்கை காணலாம் . பனம் கிழங்கை விரும்பாதோர் எவரும் இல்லை . எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள் .
மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது இந்த பனம் கிழங்கு . பனம் கிழங்கை அவித்து சும்மாவும் சாப்பிடலாம் . வெங்காயம் , பச்சை மிளகாய் போட்டு துவைத்தும் உண்ணலாம் . கூடுதலாக பல்லு இல்லாதவர்கள் இப்படி உண்பார்கள் .
பனம் பழங்கள் கிடைக்கும் காலங்களில் விதைகளைச் சேமித்து வைக்கும் மக்கள், உரிய காலத்தில் மண்ணைக் குவித்து மேடை போல அமைத்து, அதன்மேல் பனம் விதைகளைப் பரவி விடுவர். விதை முளைத்துக் கிழங்கு உருவானதும் அதனைக் கிண்டி எடுத்துப் பயன்படுத்துவர்.
பனம் பழம்
சரி . இனி பனம் கிழங்கு எவ்வாறு உருவாகின்றது ? பனையில் இருந்து விழும் பனம் பழத்தின் விதை தான் பின்பு பனம் கிழங்காக வருகின்றது . பனம் விதைகள் முளைக்கும்போது, நிலத்துட் செல்லும்வேரில் மாப்பொருள் சேமிக்கப்பட்டுக் கிழங்காக உருவாகின்றது. இதுவே பனங்கிழங்கு ஆகும்.
ஒரு முனை கூராகவும், மறு முனை சுமார் ஒரு அங்குலம் விட்டம் கொண்டதாகவும் உள்ள ஒடுங்கிய கூம்பு வடிவான இக் கிழங்கு ஒரு அடி வரை நீளமானது.
பனங் கிழங்கைப் பச்சையாக உண்பதில்லை. உடனடியாக உண்பவர்கள் அதனை நீரில் இட்டு அவித்து உண்பர். கிழங்கை அவிக்காமல் நெடுக்கு வாட்டில் இரண்டாகக் கிழித்து, வெய்யிலில் காய விடும்போது, சிலநாட்களில் அது நீரை இழந்து, கடினமான ஒன்றாக ஆகும். இது ஒடியல் என அழைக்கப்படுகின்றது.
இதை அப்படியே உண்பதில்லை. இதனை மாவாக்கிப் பிட்டு , கூழ் முதலிய உணவு வகைகளைச் செய்யப் பயன் படுத்துவது வழக்கம். அவித்த கிழங்கை வெய்யிலில் காயவிட்டுப் பெறப்படும் பொருள் புழுக்கொடியல் (புழுக்கிய ஒடியல்) எனப்படும்.
புழுக்கொடியலை நேரடியாகவே உண்ணலாம். ஒடியல், புழுக்கொடியல் இரண்டுமே, நீண்டகாலம் கெட்டுப்போகாமல் இருக்கக் கூடியன.
பனங்கிழங்கை அவித்து காய வைத்து வரும் புளுக்கொடியல் மாவை காலை உணவாக உண்ணலாம் . அதற்க்குள் சீனியும் , தேங்காய் பூவும் போட்டு குழைத்து சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும் . வயிற்றுக்குள் பூச்சி இருந்தால் இறந்துவிடும் .
பனங்கிழங்கை அவிக்காது எடுக்கப்படும் ஒடியலில் இருந்து ஒடியல் மா எடுப்பார்கள். ஒடியல் மாவில் இருந்து ஒடியல் பிட்டு, ஒடியல் கூழ் ஆகிய உணவுகள் தயாரிக்கப்படுகிறது. இவை மிகவும் பிரபலமான உணவுகள்
Comments