இன்றைய பஞ்சாங்கம்!
இன்று, விளம்பி வருஷம் I உத்தராயணம் I க்ரீஷ்மருது | ஆனி 15 I இங்கிலீஷ்: 29 June 2018 I வெள்ளிக்கிழமை | பிரதமை பகல் 12.57 மணி வரை, பின் துவிதியை | பூராடம் மாலை 3.50 மணி வரை, பின் உத்திராடம் | மாஹேந்த்ரம் நாமயோகம் I கௌலவம் கரணம் I சித்த யோகம் | ராகு காலம்: காலை 10.30 - 12.00 I எமகண்டம்: மதியம் 3.00 - 4.30 I குளிகை: காலை 7.30 - 9.00 | சூலம்: மேற்கு I பரிகாரம்: வெல்லம் I இன்று கீழ் நோக்கு நாள்.
சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். மதுராந்தகம் ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி பவனி வரும் காட்சி.
திதி:அதிதி I சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீரீஷம்.
மேஷம்
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் -தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது குறை சொல்லியபடி இருப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவது நன்மையை தரும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து தேவையான பணிகளை கவனிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5
ரிஷபம்
கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி(வ), சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன..
பலன்:
இன்று புத்திசாதூரியம் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. பேச்சு திறமை அதிகரிக்கச் செய்யும். எதிர் பாலினத்தவரிடம் பழகும்போது கவனம் தேவை. நண்பர்கள் மூலம் வீண் அலைச்சல் குறையும். நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக் கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6
மிதுனம்
கிரகநிலை:
ராசியில் சூர்யன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய், கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரம் தொடர்பாக செய்து முடிக்க நினைக்கும் காரியங்கள் தள்ளிப்போகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலை பளு இருக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1,2
கடகம்
கிரகநிலை:
ராசியில் ராகு, சுக்ரன், புதன் - சுக ஸ்தானத்தில் குரு(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகங்கள் வலம் வருகின்றன..
பலன்:
இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் காரியங்கள் நடக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பேச்சு திறமையால் காரியங்களை சாதகமாக செய்து முடிப்பீர்கள். அலைச்சல் குறையும்.
தேவையற்ற எண்ணங்களை விட்டுவிட்டு மனதை ஒருமுகப்படுத்துவது வெற்றிக்கு உதவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6
சிம்மம்
கிரகநிலை:
தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
இன்று காரிய அனுகூலம் உண்டாகும். எல்லாவித வசதிகளும் உண்டாகும். தேடிப்போனதும் தானாகவே வந்து சேரும். அறிவுத்திறன் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் இனிமையாக பேசி பொழுதை கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 5
கன்னி
கிரகநிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு(வ) - சுக ஸ்தானத்தில் சனி (வ), சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், கேது - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் ராகு, சுக்ரன், புதன் என கிரகங்கள் வலம் வருகின்றன
பலன்:
இன்று தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றம் பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவார்கள். சிலருக்கு உத்தியோகம் கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். பண வரத்து ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 9, 3
துலாம்
கிரகநிலை:
Comments